About

Layer 114@2x

This was a remedy to Lord Shiva after committing the worst possible crime in Hinduism. Brahmincide, by killing King Ravana, who had abducted Rama’s consort Shiva. Ravana was a Brahmin. The Shivalingam in Manavari is called Ramalingam, as it was erected by Lord Rama. There are only two Lingams in the world named after Lord Rama, the other one being that of Rameshwaram in India, the most sacred place in Tamil Nadu.

A Ramalingam is as extraordinary object of worship in Hinduism, as Rama is as incarnation of Vishnu and a Lingam is a representation of Shiva. Vishnu and Shiva being the highest gods of different groups of Hindus. Usually, in Vishnuism, Vishnu does not venrate Shiva. He dos so as Rama, as told in the Vishnuite Ramayana Epic, because the sacrilege of brahmincide was indespensible to restore the order of the world by freeing Sita and returning to rule in Ayodhya. The erection of the Lingam as symbol of Rama’s devotion to Shiva hence is as extraordinary event in Hindu Mythology.

Layer 114@2x

01 ஆலயத்துக்கு உட்புகும் வீதியில் அமைக்கப்படவிருக்கும் நுழைவுக் கோபுரம் 2.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வரைபடம் தயார் நிலையில் உள்ளது.

02 அன்னதான மண்டபம் – சமையலறை, களஞ்சியசாலை உள்ளளடக்கியதாக அமைக்கப்படவேண்டும். இன்னும் மதிப்பீடு செய்யப்படவில்லை.

03 யாத்திரிகர் மடம் –  யாத்திரிகர்கள் வந்து குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் யாத்திரிகர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான வசதியுடன் கூடியதாக அமைக்கப்பட வேண்டும். இதுவும் இன்னும் மதிப்பிடப்படவில்லை.

04 இராஜ கோபுரம்,விக்கு, தெற்கு,மேற்கு கோபுரங்கள்.

05 ஆலயத்தின் சுற்று மண்டபம். இன்னும் மதிப்பிடப்படவில்லை

பிரம்மஸ்ரீ மு. சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்கள் மொழிபெயர்த்தது.

(ஸ்ரீ தஷிணகைலாய புராணப் பதினைந்தாவது அத்தியாய மொழிபெயர்ப்பு)

உலக சிருஷ்டிகர்த்தாவாகிய பிரமதேவர் முன்னைநாளில் தருப்பைச் சக்கரத்தைச் செலுத்திப் புண்ணிய பூமியாகக் கண்ட நைமி சாரணியகத்தில் வாசஞ் செய்த தவ சிரேட்டர்களாகிய சௌனகாதி முனீந்திரர் கோமதியாற்றங்கரையில் ஓர் யாகத்தைச் செய்து கொண்டிருந்தார்கள்.

அவ்வாறிருக்கும் நாளில் சகல வேதாகம புராணங்களை யோதியுணர்ந்த குருபுங்கவராகிய,  வியாஸபகவானின் பூரண கருணை  பெற்று முற்றத்துறந்த சூதாமாமுனிவர் மரவுரி தரித்துச் சடைமுடி துலங்க விபூதி ருத்திராகஷ்ம் விளங்க அவ்விடத்தை வந்தடைந்தார். அடைந்த முனிவர் பெருமானைக்கண்ட நைமிசாரணியவாசிகள் விரைந்டிததிர்கொண்டு  சென்று  பாதங்களில் வீர்;ந்து நமஸ்கரித்து, உபசாரத்தோடழைத்து வந்து, ஆசனத்திருத்திப் பூசித்து, அனைவருமவரைச் சூழ்ந்திருந்து, ‘சுவாமி! அடியேங்கள் ஈடேறும்  பொருட்டு ஸ்ரீ  முன்னேஸ்வரசேஷ்த்திர வைபவத்தைத் திருவாய்  மலர்ந்தருள வேண்டும்” மென்று  பிரார்த்திக்க, அவர்கள் மீது கருணை கொண்ட சூதமாமுனிவர் அவர்களை  நோக்கி, பூலோகத்துள்ள சீவகோடிகளுய்வடையும் பொருட்டு பிரமதேவாற் பிரதிஷ்டை  செய்து பூசிக்கப் பெற்று, சுவாயம்புவேஸ்வரர் என்னுந் திருநாமத்தோடு திருக்கோயில் கொண்டு மெய்யடியார்க்குப் பார்த்தல், கேட்டல், நினைத்தல் மாத்திரத்தே இட்டசித்திகளை அனுகிரகித்து விளங்கும் ஸ்ரீ முன்னேஸ்வரசேஷ்த்திர வைபவத்தைச் சிரத்தையோடு  கேட்பீர்களாக என்று  கூறத் தொடங்குகின்றார்.

அயோத்திமாநகரிலிருந்து ஏக சக்கராபதியாயரசண்ட தசரதச் சக்கிரவர்த்தியின் புத்திரனான ஸ்ரீ ராமபிரான் இலங்கைக்கு வந்து ராவணசங்கராஞ் செய்த பின் சீதாதேவி, லஷ்மணப் பெருமாள், விபீஷணாழ்வார் ஆதியரோடும்  மற்றுஞ் சைனியங்களோடும், அயோத்திமாநகர்க்குச் செல்லும் நோக்கமாகப் புஷ்பகவிமானத்திலேறி ஆகாயமார்க்கமாகப் போகும்பொழுது, கரியநிறமும் சாயாரூபமு முடைய பிரமகத்தியானது பின் தொடர்ந்தது.

அப்போது சாயாரூபமான  பிரமகத்தினாது, ஸ்ரீ முன்னேஸ்வரசேஷ்த்திரத்தைச் சமீபத்தவுடன்  தன்னைவிட்டகன்று போவதைக் கண்ட ஸ்ரீ ராமபிரான், ‘ஈதென்ன ஆச்சரிமாயிருக்கின்றதே” என்று ஆராயும் போது, சோதிமயமான உன்னத கோபுரம் தீர்த்தம், நந்தவனம் முதலானவைகளோடு விளங்குகின்ற ஸ்ரீ முன்னேஸ்வரசேஷத்திரத்தைக் கண்டு உள்ளநெக்குருக மெய்மயிர்ச்சிலிர்ப்ப, ஆனந்த அருவி சொரிய, இரண்டு கைகளையுஞ் சிரமேற்கூப்பி, பரிவாரங்களோடு  பூமியிலிறங்கி, சன்னிதானத்தில்  விளங்குவதும்  பரமார்த்தத்தைக் கொடுப்பதும், பாவத்தைக் கெடுப்பதும், தீமையைத் தடுப்பதுமாகிய சிதீர்த்தத்தில் சீதாபிராட்டியார் முதலியவர்களோடு விதிப்படி ஸ்நானம் செய்தவுடன், தமக்குண்டான சரீராரோக்கியத்தையும் உள்ளக் கிளர்ச்சியையும் கண்டு பேரானந்தங்கொண்டு. ஆனந்தப் பரவசராய் நித்தி கர்மனுஷ்டானங்களை முழத்துத் திருக் கோயிலுட்போய், பரார்த்த முன்னநாததேஸ்வரரையும்  வடிவாம்பிகையும்  சோடசோப சாரங்களினாற் பூசித்து துதித்து நமஸ்கரித்து, ‘பரார்த்த மூர்த்தியே! பாபரகிதரே” ஆனந்த ரூபியே!  அனாதரசஷ்கரே! அபீஸ்டவரதரே!” என்று இரண்டு  கைகயையும் சிரமேற் கூப்பிக் கண்ணீர்வாரக் கருத்தழிந்து பிரார்த்திக்கும் போது, பரமேஸ்வரன் வடிவாம்பிகையோடு இடபாரூடராய் நந்தி, பிருங்கி முதலிய தேவகணங்கள் சூழக் காட்சி கொடுத்தருளினார்.

ஸ்ரீ ராமபிரான் சீதாபிராட்டியரோடு  பரமேஸ்வரனுடைய திருக்கோலத்தைக் கண்டு, ஆனந்தம் கொண்டு, கண்ணீர் பெருக, நாத்தழுதழுக்க,  ரோமஞ்சங் கொள்ளத் தாண்டவம் புரிந்து, ‘என்னாருர்த் தெய்வமே! அடியார்கெளியரே! கருணைவாரிதியே! அடியேனைப் பின்தொடர்ந்து வரும்  பிரமகத்திதோஷத்தை நீக்கி ஆண்டருள வேண்டுமெனப் பிரார்த்திக்க, வேண்டுவார் வேண்டுவதை வரையறாது கொடுக்கும்  கருணைக் கடலாகிய முன்னேஸ்வரப் பெருமான்  திருவுளமகிழ்ந்து, ராமா! உனது பிரமகத்தி தோஷம் நீங்கும்  பொருட்டு இவ்விலங்காபுரியில் விளங்கும் சிவசேஷ்த்திரங்களாகிய முன்னேஸ்வரம், கேதீஸ்வரம், கோணேஸ்வரம்  என்னும் மூன்று சேஷ்த்திரங்களிலும் உன் நாமத்தோடு மூன்று  சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, பின் சேதுக்கரையிலும் ஓர் சிவலிங்கப் பிரதிஷ்டை  பண்ணி,  புருஷார்த்தங்களாகிய அறம், பொருள், இன்பம் வீடு என்னும் நான்கையும் முறையே பெற்று வாழக்கடவாயென்று திருவாய்மலர்ந்தருள, ஆனந்த தாண்டவம் புரிந்து நின்ற ராமபிரான், ‘சுவாமி! இம்முன்னேஸ்வர சேஷ்த்திரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யக்கூடிய தலத்தை  அருளிச் செய்ய வேண்டும்” மென்று பிரார்த்தித்தார்.

முன்னேஷ்வரப் பெருமான்  கருணை  கூர்ந்து, ‘ராமா! இந்த  சேஷ்த்திரத்திற்கு வட திசையில் விளங்கும்  மாயவனாற்றுக்கு  வடபாகத்தில் (மானாவரி யென்னும் புண்ணியம் சேஷ்த்திமொன்றுண்டு, அந்த  சேஷ்த்திரத்தில் ராமலிங்கம் என்னும்  பெயரோடு  ஓர் சிவலிங்க பிரதிஷ்டை  செய்யக்கடவாய்”  என்று அருளிச் செய்து மறைந்தருளினார். அப்போது  அன்பானினைவாரதுள்ளக் கமலத்துறைந்தருளும் நிர்மல  வஸ்துவாகிய முன்னைநாதப் பெருமான் திருவாக்கை கேட்டராமபிரான் களிப்படைந்து, முன்னைநாதஸ்வாமியினாலருளிச் செய்யப்பட்ட மானவாரி சேஷ்த்திரத்தையடைந்து, விசுவகர்மாவினால் ஆலய நிர்மாணஞ்  செய்வித்து, ஆனி மாதமும் பூர்வபக்கத் திருதியைத்திதியு புதன்கிழமையும் கூடிய சுப முகூர்த்தத்தில், ராமலிங்கம் என்ற திருநாமம்  விளங்க சுவர்ணலிங்கத்தைப் பரிவாரமூர்த்திகளோடு  பிரதிஷ்டை செய்து சிவசோதிபாதத்தில் நின்று  உற்பத்தியாகி வரும் மாயவனாற்றை வரவழைத்து அபிஷேகாதிபூசை செய்து பிரார்த்தித்து,

அபீஷ்டவரங்களைப் பெற்று பரிவாரங்கள் சூழச்  சீதாபிராட்;டியாரோடு புஷ்பக விமானத்திலேறித் திருக்கோணாசலத்தை யடைந்து, ஆனி மாதப்பூர்வ பக்கப் பஞ்சமித்தியும் வெளிக்கிழமையும். கூடிய சுபதினத்தில். ரௌப்பியலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து கேதீஸ்வரத்தையடைந்து ஆனி மாத பூருவபக்கச் சத்தமித்திதியும் ஞாயிற்றுக்கிழமையும் கூடிய சுப முகூர்த்தத்தில், ரத்தினலிங்கப் பிரதிஷ்டை செய்து சேதுக்கரையடைந்து ஆனி மாதப் பூர்வபக்கத் தசமித்திதியும் அத்த நஷத்திரமும் புதன்கிழமையும் கூடிய சுப முகூர்;;;த்தத்தில் சைகதலிங்க பிரதிஷ்டை செய்து பிரமகத்தியாதி மகாபாதகங்கள் நீங்கிச் சர்வாபீஷ்டங்களையுமடைந்து அயோத்திமாநகரஞ் சென்று பட்டாபிஷேகம் பெற்று ஏக சக்திராதிபதியாயரசாண்டிருந்தார்

‘முனிசிரேடஷ்ர்கனே! சங்கற்பபூர்வமாக மாயவனாற்றில் ஸ்;நானாதிகள் முடித்து. ராமலிங்கப் பெருமானைப் பூதித்து. ஸ்ரீமுன்னேஸ்வர சேஷ்த்திரத்தையடைந்து சித்தாமிர்த தீர்த்த சிவ தீர்த்தம் முதலிய தீர்த்தங்களில் விதிப்படி மூழ்கி. ஸ்ரீமுன்னைநாத ஸ்வாமியையும் வடிவாம்பிகையையும் பரிவாரமூர்த்திகளையும்; அன்போடு வழிபட்டுப் பிரார்த்திக்கின்றவர்கள். இம்மையில்வேண்டிய இஷ்டசித்திகளைப் பெற்;றுப் பெருவாழ்வடைந்து மறுமையிற் சிவனடி நிலை அடைவார்கள்

ஸ்ரீராமஸ்வாமி அருச்சித்த படலம் முற்றிற்று.